Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரயில் மோதி ரயில்வே ஊழியர் பலி

மாதவரம், ஆக.20: சென்னை பெரம்பூர் கேரேஜ் - பெரம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு 7.10 மணியளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பூர் ரயில்வே காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அதில் இறந்தவர் வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெருவைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான மோகன்(56) என்பதும், தண்டவாளத்தை கடந்தபோது மின்சார ரயில் மோதி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இறந்த மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.