Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம்

திருவள்ளூர், ஆக.19: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் திருவள்ளூர் மாவட்ட மையத்தின் சார்பாக கல்வெட்டு திறப்பு விழா, கொடியேற்று விழா மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று பொன்னேரியில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் ஆர்.எம்.செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்வந்தர் தாஸ் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் சங்கத்தின் மாநில தலைவர் ராஜா, சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் அண்ணா குபேரன், சங்க கல்வெட்டினை திறந்து வைத்து பேசினார். விழாவில் மாநில செயலாளர் பேபி, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் லோகநாதன், சென்னை மாவட்ட தலைவர் ரவி ஆகியோர், வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் அனைத்து மாவட்ட, கோட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில், பொன்னேரி கோட்ட பொருளாளர் குமார் நன்றி கூறினார்.