Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

பொன்னேரி, ஆக.19: ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், காவல் இணைய ஆணையர் சிவக்குமார் மேற்பார்வையில் துணை ஆணையர் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி உதவி ஆணையர் ராஜாராபர்ட் (பொறுப்பு) வழிகாட்டுதலின் பேரில் திருப்பாலைவனம் காவல் நிலைய ஆய்வாளர் அகிலன்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் பொன்னேரி பகுதிகளில் கடந்த சில தினங்களாக வழிப்பறி, அடிதடி, கத்தியை காட்டி மிரட்டல் உள்ளிட்ட தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பொன்னேரியை அப்பன்ராஜ்(32), ராஜவேல்(25), முருகன்(25) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து வழக்கு பதிந்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள வாண்டு பாரத் (27) என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.