Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மாதவரம், ஆக.19: சென்னை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்திற்கு ரயிலில் கடத்திச் செல்ல பதுக்கி வைத்திருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து, ரேஷன் அரிசி மூட்டைகளை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.