Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பைக் மீது லாரி மோதி கணவன், மனைவி காயம்

திருவள்ளூர், மே 18: திருவள்ளூர் அடுத்த மப்பேடு, மேட்டு தெருவை சேர்ந்தவர் பாபு (50). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி கீதா (45) உடன் வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் பேரம்பாக்கம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். மப்பேடு இந்தியன் வங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த கணவன், மனைவியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாபு மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.