Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தனியார் வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட கலெக்டர் பிரதாப் தகவல்

திருவள்ளூர், மே 18: திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வரும் 22ம் தேதி 10 மணி முதல் மாலை 3 வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 250க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ள உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தனியார்துறை இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு தனியார் துறையில் சிஎன்சி, குவாலிட்டி இன்ஸ்பெக்டர், சைட் இன்ஜினியர், பிசினஸ் டெவலப்பர்ஸ் ட்ரெயினி, மிஷின் ஆப்பரேட்டர், டெக்னீசியன், நிர்வாகப் பணி போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்பினைப் பெற்று பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ள வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்துக் கொண்டு பயன் பெறுமாறு திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.