பழவேற்காட்டில் சந்தனக்குட திருவிழா
பொன்னேரி, நவ.15:பொன்னேரி அடுத்த, பழவேற்காடு கரையார்தெருவில் அமைந்துள்ள ஹஜ்ரத் செய்யதீனாஷேக் அப்துல் சுபூர் மவுலானா காதிரி பக்தாதி மற்றும் ஹஜ்ரத் செய்யதீனா உஸ்தாத் ஷாஹுல் ஹமீது ரிபாய் காதிரி தர்காவில் சந்தன குடம் உருஸ் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், பழவேற்காடு சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாமல் ஆந்திரா, சென்னை, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த தர்காவிற்கு புனித பயணம் மேற்கொள்கின்றனர். பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி தர வேண்டி பிரார்த்தனை செய்து இந்த தர்காவில் தங்கி செல்கின்றனர்.
உருஸ் தினத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு திரண்டு சந்தனக்குட ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்துகொண்டு தர்காவில் பிரார்த்தனை செய்தார். திமுக ஒன்றிய பொறுப்பாளர் முரளிதரன் திமுக நிர்வாகிகள் ரவி அசோகன், மீரான் பாஷா, ஹாஜா, காஜாமொய்தீன், சரவணன், துராபுதீன், சம்மது, முகம்மது அலி, நஸீர், சதாம், முபாராக், மணிகண்டன், நித்யானந்தன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயராமன், ஜெயசீலன், சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.