திருத்தணி, நவ.15: திருத்தணியில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், மறைந்த ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று குழுந்தைகள் தினத்தையொட்டி, திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நேருவின் முழு உருவ சிலைக்கு நகராட்சி சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி சார்பில் அக்காட்சி நகர தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
