பொன்னேரி, ஆக 14: சென்னை வெளிவட்ட வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் நேற்று அம்பத்தூர் திருவள்ளூர் நகரை சேர்ந்த ஜெகா (21), ஆவடி நசரத் கல்லூரியில் பிகாம் படித்து வந்தார். இவரது நண்பர் சென்னை பட்டாளம் சுகுமார் (22) மற்றும் மூன்று நபர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேக பைக் ரேசிங்கில் ஈடுபட்டனர். அப்போது, திருமுல்லைவாயல் மேம்பாலம் மீஞ்சூர் அருகே வரும்போது இதில் ஜெகா, சுகுமார் இருவரின் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஜெகா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்தை சென்று ஜெகாவை மீட்டு பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். நண்பர் சுகுமார் பலத்த காயமடைந்து பாடியநல்லூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



