திருவள்ளூர், ஆக.13: திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை கடைகள், மதுக்கூடங்கள் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கண்டிப்பாக மூடவேண்டும் என்று கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த மதுக்கூடங்கள், கிளப்புகள், ஓட்டல்கள் ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை வரும் 15ம் தேதி சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று தற்காலிகமாக மூடுவதற்கு ஆணையிடப்படுகிறது.
மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவன பணியாளர்கள் மற்றும் மதுக்கூடங்கள், கிளப்புகள், ஓட்டல்கள் ஆகியவற்றின் உரிமைதார்களின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் கவிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.



