புழல், ஆக.12: புழல் அருகே லாரி மோதியதில் சாலையில் விழுந்த கம்பத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. புழல் - காந்தி பிரதான சாலை, வடபெரும்பாக்கம் இணைப்பு மேம்பாலம் அருகே சரக்கு லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அப்போது, புழல் அடுத்து வடபெரும்பாக்கம், செங்குன்றம் - மாதவரம் மாநில சாலையில் வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின்சார கம்பம் மீது மோதியது.
இதில், அடுத்தடுத்த 3 மின்சார கம்பங்கள் இடிந்து விழுந்த விபத்தில், அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து, தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிரான்ட் லைன் மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், மின்சாரத்தை துண்டித்து, மிகவும் ஆபத்தான 3 மின்சார கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.




