Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருவள்ளூரில் முன்பகை காரணமாக வாலிபருக்கு அடி உதை

திருவள்ளூர், ஆக.12: திருவள்ளூரில் முன்பகை காரணமாக வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர், ராஜாஜி சாலையை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் யுகேந்திரன் (19). இவர், நேற்று முன்தினம் தன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தீபக் தர்ஷன், ஜெயசூர்யா, பிரவீன், ஜெய் ஆகிய 4 பேரும், ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்பகையை மனதில் வைத்துக்கொண்டு, அவரை தனியாக அழைத்துச் சென்று தகாத வார்த்தைகளால் பேசி அடித்து, உதைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு, தப்பிச்சென்று விட்டனர்.

இதனால் காயமடைந்த அவர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து யுகேந்திரன், திருவள்ளூர் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், முன்பகை காரணமாக யுகேந்திரனை தாக்கிய 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.