Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வாலிபரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது

ஆவடி, ஆக.8: ஆவடி அடுத்த மோரை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(40), பாக்கம் பகுதியில் பிவிசி டோர் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மோரை பகுதியில் உள்ள தனது அண்ணன் விஜயகுமார் மற்றும் அவரது மகன் ஜெயக்குமார் இருவரும் பிரியாணி வாங்க சென்றபோது மது போதையில் இருந்த அதே பகுதியில் சேர்ந்த சாலமன் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, கடந்த 5ம் தேதி சாலமன், பிரேம்குமாரை பாலவேடு வண்டலூர் வெளிவட்டார சாலை அருகே வரவழைத்தார். அங்கு மறைந்திருந்த 5 பேர் கும்பலுடன் சேர்ந்து பிரேம்குமாரை சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டிவிட்டு தப்பினார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் படுகாயமடைந்த பிரேம்குமாரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் பிரேம்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சாலமன்(25), பிரசாந்த்(31), அப்பு(29) மற்றும் அனந்தபாபு(29) ஆகியோரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.