Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பள்ளிப்பட்டு அருகே கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் உடைந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் கடும் அவதி

பள்ளிப்பட்டு, ஆக.8: பள்ளிப்பட்டு அருகே கூட்டு குடிநீர் திட்ட பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பள்ளிப்பட்டு ஒன்றியம் கொல்லாலகுப்பம் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் பாண்டறவேடு ஏரியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கூட்டு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் பைப் லைன்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி, தண்ணீருக்காக கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். எனவே, குடிநீர் பைப் லைன் உடைப்பை சரி செய்து தடையின்றி குடிநீர் வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.