Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி

திருவள்ளூர், ஜூன் 8: காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (60). இவர் குடும்ப பிரச்னை காரணமாக தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து கோயம்பேடு பகுதியில் வசித்து, நில புரோக்கர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 5.45 மணியளவில் சென்னையில் இருந்து திருத்தணி வரை செல்லும் புறநகர் மின்சார ரயிலில் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஏறி ஏழுமலை பயணம் செய்துள்ளார்.அப்போது திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கி நடைமேடையில் உள்ள பயணியர் அமரும் பகுதியில் மயங்கி விழுந்துள்ளார்.

இதுகுறித்து பயணியர் கொடுத்த தகவலின்படி திருவள்ளூர் ரயில்வே போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அவரை பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.