Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறப்பு தொழில் கடன் முகாம்

திருவள்ளூர், ஜூன் 8: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சேவை நிறுவனங்களுக்கு புதிய தொழிற்சாலைகள் மற்றும் சேவை நிறுவனங்களை அமைப்பதற்கும், தற்போது இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

அதன்பேரில் 86 சி மற்றும் டி, 2வது பிரதான சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை - 600058 என்கிற விலாசத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு தொழில்கடன் முகாம் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக்கட்டணத்தில் விலக்கு வழங்கப்படும்.

எனவே, புதிய தொழில் முனைவோரும் தொழிலதிபர்களும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தொழில் கடன் மற்றும் அரசின் மானியத் திட்டங்களின் பலன்களை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு 9444396845, 9445023465, 044-26257664 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ச.கவிதா தெரிவித்துள்ளார்.