திருத்தணி, அக்.2: தமிழ்நாடு அளவில் பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் சிவகங்கையில் கடந்த 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்க திருவள்ளூர் மாவட்டம் சார்பில் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர் சஞ்சுவ், வேலஞ்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் விஷ்வா, ஆதவன் ஆகிய மாணவர்கள் பங்கேற்று தங்களின் கிரிக்கெட் விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக விரைவில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவில் நடைபெற உள்ள சப் ஜூனியர் கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணியில் திருத்தணி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் சஞ்சுவ், விஷ்வா, ஆதவன் ஆகியோர் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


