திருவள்ளூர், அக்.2: செம்பரம்பாக்கம் ஊராட்சியில் துணிப்பை பயன்பாடு குறித்து பேரணியாக சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஊராட்சி தூய்மை காவலர்கள் இணைந்து ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி தடை, துணிப் பைகள் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர்ராஜன், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி தடை, துணிப் பைகள் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிறகு செம்பரம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் சேகரிக்கப்பட்ட நெகிழிகளை குத்தம்பாக்கம் பிடபிள்யுஎம்யு - அலகிற்கு ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்வில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா, ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.சிவானந்தம், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அனிதாராணி, இணை ஒருங்கிணாப்பாளர் விக்ரமன், ஊராட்சி செயலர் தேன்மொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


