Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மெட்ரோ ரயில் பணியிடத்தில் பள்ளத்தில் விழுந்த வடமாநிலத்தவர் பலி

மாதவரம், ஆக.1: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் உமாகாந்த் கோகாயத் (43). இவர் பூந்தமல்லியில் உள்ள டயர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சென்னை பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலை பிருந்தா தியேட்டர் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்தார்.

அப்போது, மெட்ரோ ரயில் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமாகாந்த் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து செம்பியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.