Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

திருவள்ளூர், ஜூன் 9: திருவள்ளுர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை கலெக்டர் ச.கவிதா தொடங்கி வைத்தார்.

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1, 2, 2ஏ போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் விஜயா தலைமை தாங்கினார். திறன் மேம்பாட்டு உதவி இயக்குநர் சித்ரா, மாவட்ட திறன் அலுவலர் லோகேஷ்வரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் பாலசுப்பரமணியம், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ச.கவிதா கலந்து கொண்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு புத்தக தொகுப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பி.பவித்ரா, துறை சார்ந்த அலுவலர்கள், பயிற்சி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.