Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் மாயம்

திருவொற்றியூர், ஜூன் 9: திருவொற்றியூரை சேர்ந்தவர் ஐசக் (19). புது வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஐ.டி.ஐ., கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை தாய், அக்கா கிரேசி, தங்கைகள் எல்சி, பெல்சி ஆகியோருடன் திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஐசக், கிரேசி ஆகியோர் கடலில் குளித்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி ஐசக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். உறவினர்களால் அவரை மீட்க முடியவில்லை.

தகவலறிந்து வந்த திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்களும், திருவொற்றியூர் போலீசாரும் பைபர் படகு மூலம் மாணவனை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவொற்றியூர் தவெக எம்எல்ஏ செந்தில்குமார் நேற்று பைபர் படகு மூலம் சம்பவ இடத்தில், மாயமான மாணவன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.