Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மெரில் டயக்னாஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பூந்தமல்லி பனிமலர் கல்லூரி மாணவருக்கு ரூ.1.2 கோடி ஊதியம்

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையை சேர்ந்த 2027ம் ஆண்டு பட்டம் பெறவுள்ள இறுதியாண்டு மாணவர்கள் 3 பேர், முன்னணி மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான மெரில் டயக்னாஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் உயரிய ஊதியத்துடன் பணி நியமனம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மாணவன் ஜே.பி.ஸ்டீவ் ஜெரால்டு, தொழில்நுட்பக் குழுத் தலைவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு, செயல்திறனின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி ஊதியம் வழங்கும் வகையில் பணி நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மாணவர்கள் எம்.எஸ்.வசந்த் சந்தீப், ஆர்.சிபில் டொமினிக் ஆகியோர் இளநிலை மென்பொருள் உருவாக்குநர் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, செயல்திறனின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஊதியம் வழங்கும் வகையில் பணி நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் இந்த சாதனையை பாராட்டிய கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ப.சின்னதுரை, இயக்குநர் சி.சக்திகுமார் ஆகியோர், மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தி, தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவர்களை தயார்படுத்துவதில் சிறப்பாக பங்களித்த கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர், பேராசிரியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கழகத்தினருக்கு தங்களது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தனர். மாணவர்களின் இச்சாதனை, பனிமலர் பொறியியல் கல்லூரியின் கல்வி சிறப்பையும், தொழில்துறைக்கு தேவையான திறன்களுடன் மாணவர்களை உருவாக்குவதில் கல்லூரி மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளையும் பறைசாற்றுகிறது.

நிகழ்வின்போது, கல்லூரி முதல்வர் கே.மணி, முதன்மை கல்வி அதிகாரி எஸ்.பிரசன்ன தேவி, கணினி பொறியியல் துறை தலைவர் எல்.ஜெபசீலா, வேலைவாய்ப்பு அதிகாரி ஐ.பால் தியோபஸ் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.