Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரியபாளையம் அருகே சேதமடைந்த அங்கன்வாடி மையம்: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை

ஊத்துக்கோட்டை, ஜூலை 30: பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம் கிராமத்தில் சேதமடைந்து புதர்கள் மண்டி கிடக்கும் அங்கன்வாடி மையம் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்து, கட்டிடம் விரிசல் ஏற்பட்டு மழை காலங்களில் மழை பெய்தால் மழைநீர் உள்ளே வருகிறது. இதில், மாணவர்களின் புத்தக பைகள் நனைந்தது. இதனால், அவர்கள், அவதிப்பட்டு வந்தனர். மழை காலங்களில் இங்குள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில், மாணவர்கள் நடந்து சென்று படித்து வந்தனர்.

இந்த மழைநீர் நாளடைவில் கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் இருந்தது. தற்போது, புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால், இந்த அங்கன்வாடி மையம், தற்போது அருகில் உள்ள சமுதாய கூடத்தில் இயங்கி வருகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: எங்கள் பிள்ளைகள் படிக்கும் ஏனம்பாக்கம் அங்கன்வாடி மையத்தின் கட்டிடம் விரிசல் ஏற்பட்டும். சேதமடைந்தும் காணப்படுகிறது. மேலும், மழை காலங்களில் மையத்தின் அருகிலும், பின்புறத்திலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும், இதில் உற்பத்தியாகும் கொசுவால் எங்கள் பிள்ளைகளுக்கு டெங்கு காய்ச்சல், மலேரியா, காலரா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது.

மேலும், தற்போது அங்கன்வாடி மையத்தை சுற்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது. மேலும், சமுதாய கூடத்தில் படிக்கும் எங்கள் பிள்ளைகளுக்கு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட வேண்டும் என கூறினர்