Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

வாரத்தில் 5 நாள் சேவையை அமல்படுத்த கோரி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஆக.29: வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகி, பாரத் ஸ்டேட் வங்கி மண்டல துணை செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினார். வங்கிகளின் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கணேஷ், ராஜேஷ், மணிகண்டன் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும். 5 நாள் வங்கி சேவையை அமல்படுத்த வேண்டும், அரசின் ஒருதலைபட்சமான மற்றும் பாரபட்சமான பிஎல்ஐ திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

சங்கங்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் திட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும், நிலுவையிலுள்ள பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.