Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஊத்துக்கோட்டை பகுதிகளில் மழை; தண்ணீர் நிரம்பி வழியும் சிட்ரப்பாக்கம் தடுப்பணை!!

ஊத்துக்கோட்டை, அக்.28: ஊத்துக்கோட்டை பகுதிகளில் பெய்த பரவலான மழை காரணமாக சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை காலங்களில் நிரம்பியதும் தண்ணீர் திறக்கப்பட்டால், இந்த தண்ணீர் நாகலாபுரம், சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக சென்று பழவேற்காடு கடலில் கலக்கும்.

இவ்வாறு வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்க ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள சிட்ரபாக்கத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். மேலும் ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான சிட்ரபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நெல், கரும்பு, பூ செடிகள் என பல பயிர்கள் வைத்துள்ளனர். அவர்களின் நீர் ஆதாரத்திற்காக சிட்ரபாக்கம் பகுதியில் தடுப்பணை கட்டி நீரை தேக்க வேண்டும் எனவும் பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 1989ம் ஆண்டு சிட்ரபாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மற்றும் பருவமழை தாமதம் காரணமாக ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் சிட்ரப்பாக்கம் அணை வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் பெய்த பரவலான மழையால், ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழை தண்ணீர், சுருட்டபள்ளி அணைக்கட்டிற்கு வந்து பின்னர் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அடங்கிய சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பியது.

இதனால் இந்த ஆண்டு விவசாயத்திற்கு ஊத்துக்கோட்டை, அனந்தேரி போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என தெரிகிறது. இதனால் ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள கிராம மக்களும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் வரை சிட்ரபாக்கம் தடுப்பணை தண்ணீரிண்றி வறண்டு காணப்பட்டது. கடந்த சில நாட்களில் மழை பெய்து தடுப்பணையில் தண்ணீர் நிரம்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என விவசாயிகள் கூறினர்.