திருவள்ளூர்: மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூர், சிவி நாயுடு சாலையில் பொதுமக்களை கவரும் வகையில் துபாய் நீர்வீழ்ச்சி, அதிசய கடல்கன்னி, திகில் வீடு, உணவுத் திருவிழா, பனிப்பொழிவு, செல்ஃபி கார்னர், 3டி, 20 வகையான ராட்டினங்கள், செல்பி கார்னர், டி.ஜே.மியூசிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு 45 கடைகள் கொண்ட ஷாப்பிங் மால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள புதிய அருங்காட்சியகம் திறப்பு விழா நடைபெற்றது.
இதன் உரிமையாளர் அஸ்வின் தலைமை தாங்கி திறந்து வைத்தார். மேலும், விழாவில் நகராட்சி திமுக கவுன்சிலர் அயூப் அலி, அண்ணாதுரை, அருங்காட்சியக மேலாளர் சிவா, சந்தோஷ் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் அருங்காட்சியகத்தில் வித்தியாசமான கற்பனை உலகத்தையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கும் வகையில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்ததுடன் அந்த நீர்வீழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். மேலும் பொருட்காட்சியை கண்டுகளிக்க வரும் குழந்தைகளை குஷிப்படுத்தும் வகையில் தினமும் அவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த பொருட்காட்சியானது வரும் அக்டோபர் 25ம் தேதி வரை தினமும் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என்று பொருட்காட்சியின் உரிமையாளர்கள் அஸ்வின், ரமேஷ், ஆகியோர் தெரிவித்தனர்.


