Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஆந்திராவுக்கு ரயிலில் கடத்த முயன்ற 1,602 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பொன்னேரி, ஜூலை 28: பொன்னேரி, அனுப்பம்பட்டு நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1,602 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் பொன்னேரி, நந்தியம்பாக்கம், அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களில் இருந்து கள்ளத்தனமாக ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, அதிகாரிகள் ரயில் நிலையங்களில் சோதனை செய்தபோது 48 மூட்டைகளில் சுமார் 1602 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. அப்போது, அதிகாரிகளை கண்டதும் ரேஷன் அரிசி கடத்தி வந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை, அதிகாரிகள் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.