Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட திறக்கப்படாத ரேஷன் கடை: பயன்பாட்டிற்கு கொண்டு வருவது எப்போது?

புழல், ஆக.26: திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை கட்டிடம் தற்போது வரை திறக்கப்படவில்லை. எனேவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சோழவரம் அடுத்த ஆங்காடு கிராமத்தில் நியாய விலை கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கட்டிடம் இடிந்து விழும் விடும் நிலையில் இருந்ததால் புதிதாக நியாய விலை கடை கட்ட வேண்டும் என கிராம பொதுமக்கள் சார்பில் அப்போதைய திமுக எம்எல்ஏ சுதர்சனத்தை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையின் அடிப்படையில் மாதவரம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ சுதர்சனம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2025-2026ம் ஆண்டு ரூபாய் 15 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டி முடிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கட்டிடம் திறக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நியாய விலை கடை வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.