Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நகராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் விடுமுறை நாட்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்த எதிர்ப்பு: ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம்

திருத்தணி, ஆக.28: விடுமுறை நாட்களில் மற்றும் அலுவலக நேரம் கடந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்த எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நகராட்சி அலுவலர்கள் நேற்று ஒரு நாள் தற்காலிக விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் திருத்தணியில் அனைத்து பணிகளும் முடங்கின. வரி செலுத்துதல் உள்ளிட்டவற்றிற்கு வந்த பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடனே வீடு திரும்பி சென்றனர். தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு மாறுதல்கள் கலந்தாய்வு நடத்தி மேற்கொள்ள வேண்டும்.

மேலும், விடுமுறை நாட்களில் அரசு வேலை நேரத்தை கடந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் தற்காலிக விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் மற்றும் அலுவலக உதவியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். பெரும்பாலான அலுவலர்கள் தற்காலிக விடுப்பு எடுத்ததால் அனைத்து பிரிவுகளும் வெறிச்சோடி காணப்பட்டன. குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக மற்றும் வரி செலுத்த வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.