Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈகோ பிரச்னையில் நண்பனை வெட்டிய வாலிபர்

பெரம்பூர், ஜூன் 24: ஓட்டேரி எஸ்விஎம் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26), தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 21ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த அவரது நண்பர் சஞ்சய் என்பவர் வெங்கடேசுடன் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் அவரை வெட்டிவிட்டு தப்பினார். படுகாயமடைந்த வெங்கடேஷை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

புகாரின் பேரில், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, ஓட்டேரி எஸ்விஎம் நகரை சேர்ந்த சஞ்சய் (21) என்பவரை கைது செய்து விசாரித்தனர். அதில் துரை மற்றும் சஞ்சய் ஆகியோருடன் வெங்கடேஷ் நட்பாக பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் துரைக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதால் சஞ்சய்யை வெங்கடேஷை வெட்டியது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் சஞ்சயை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.