பள்ளிப்பட்டு,அக்.23: பொதட்டூர்பேட்டை அருகே பாண்டறவேடு ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். விளைநிலங்கள் மீது உயரழுத்த மின்கம்பங்கள் அமைத்து விவசாய நிலங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் விவசாயிகள் தங்களில் விளை நிலங்களுக்கு சென்று வரவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் விவசாய நிலத்தின் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாக 6 அடி உயரத்தில் தாழ்வாக தொங்கி உள்ளது.
மழை காலம் என்பதாலும், காற்று மழைக்கு மின் கம்பியில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் சரி செய்ய வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பெரும் ஆபத்து ஏற்படும் முன்பு பொதட்டூர்பேட்டை துணை மின் நிலைய இளநிலை பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.


