Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கலைக்கல்லூரியில் 25ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர், செப்.23: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கலைக்கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகம் சார்பில், நாளை மறுநாள் (25ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 3 வரை திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலைக்கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, 300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த, வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ள உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்கிற தனியார் துறை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு, தனியார் துறையில் சிஎன்சி, குவாலிட்டி இன்ஸ்பெக்டர், சைட் இன்ஜினியர், பிசினஸ் டெவலப்பர்ஸ் டிரெயினி, மிஷின் ஆப்பரேட்டர், டெக்னீசியன், நிர்வாகப்பணி போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்பினை பெறலாம்.

இந்த, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ள வேலைதேடும் இளைஞர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.