Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஒரு வாரமாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

ஊத்துக்கோட்டை, செப்.23: பெரியபாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் ஒரு வாரமாக குடிநீர் விநியோக்கவில்லை என கிராமமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம் ஊராட்சியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள அண்ணாநகர் பகுதியில் கூலி தொழிலாளர்கள், வியாபாரிகள் என 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிதண்ணீர் சரிவர வரவில்லை.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் கிராம சாலையில் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து ஊராட்சி செயலாளர் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.  இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அண்ணாநகர் பகுதியில் ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை, இதை விரைந்து சீரமைக்க வேண்டும்’ என்றனர்.