Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அத்தங்கி காவனூரில் செடி-கொடிகள் படர்ந்து சேதமடைந்த பயணியர் நிழற்குடை: புதிய நிழற்குடை அமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை, மே 23: அத்தங்கி காவனூர் கிராமத்தில், செடி கொடிகள் படர்ந்து சேதமடைந்து கிடக்கும் பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியத்தில், அத்தங்கி காவனூர் கிராமம் உள்ளது. இங்கு, அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் விவசாயிகள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தின் மைய பகுதியில் கடந்த 40 வருடத்திற்கு முன்பு பயணியர் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டப்பட்டது. அத்தங்கி காவனூர் பகுதியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இங்கிருந்து பெரியபாளையம், திருவள்ளூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, இந்த பயணியர் நிழற்குடை செடி-கொடிகள் கூரைவீடு போல் படர்ந்துள்ளது. மேலும், இதில் இருந்த சிமென்ட்டுகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்து, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும். விரைவில் நிழற்குடை அமைக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.