Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காமாட்சியம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

திருவள்ளூர், ஜூன் 22 மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் 56வது பிறந்தநாளை முன்னிட்டு, மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பிறகு ராகுல்காந்தி நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் இருந்து நாட்டிற்கும், மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய இறைவனை வேண்டி, தங்கத்தேர் இழுத்து பக்தி பூர்வமாக பிரார்த்தனை செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி கிழக்கு வட்டார தலைவர் சேகர், மாங்காடு நகர தலைவர் தேவராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். பூவை காமராஜ், பூவை கோபால், தாயுமானவன், பூவை செல்வம் ராஜன், கவுதமன், நேதாஜி, பிரகாஷ், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் காங்கைகுமார், ராகுல்காந்தி நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் இருந்து நாட்டிற்கும், மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய இறைவனை வேண்டி, தங்கத்தேர் இழுத்து பக்தி பூர்வமாக தங்கத்தேரை இழுத்து பிரார்த்தனை மேற்கொண்டார்.