Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

எல்லாபுரம் ஒன்றியத்தில் பழுதடைந்து பயன்பாடில்லாத ஊராட்சி மன்ற அலுவலகம்: புதிதாக கட்ட வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் அத்திவாக்கம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டுவதற்கு ஊராட்சி அலுவலகம் சென்று தான் கட்ட வேண்டும். ஆனால் இங்குள்ள ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. இதனால் கட்டிடம் கடந்த 4 வருடங்களாக சேதமடைந்து மழைக் காலங்களில் மழைநீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள முக்கிய கோப்புகள் நனைந்து, கட்டிடம் இடிந்து விழும் நிலையில் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் இதை யாருமே பயன்படுத்தவில்லை.

இந்நிலையில், அத்திவாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள இ-சேவை மைய கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.