Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தந்தை திட்டியதால் வடமாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

பெரியபாளையம், ஜூலை 20: பெரியபாளையம் அருகே செங்கல் சூளையில் தந்தை திட்டியதால் வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த ஏனாம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிங்கு (23) என்ற இளைஞர் 6 மாதங்களாக தனது தந்தையுடன் வந்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரிங்கு குடித்துவிட்டு வந்ததால் அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரிங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.