Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவேற்காட்டில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

பூந்தமல்லி, ஜூன் 19: சென்னை மதுரவாயல், அய்யப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(43), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் பாஸ்கர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, சுவர் முழுவதும் கரை படிந்து இருந்ததால் மெசின் மூலம் தண்ணீரை வேகமாக அடிக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக அந்த மெசினில் இருந்து மின்சாரம் தாக்கியதில் பாஸ்கர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாஸ்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.