Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெண்ணுக்கு முத்தம்; டிரைவர் கைது

போரூர், ஜூன் 19: சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் ஷாப்பிங் செல்ல முடிவு செய்து, ஆட்டோ ஒன்றில் பயனம் செய்தார். அப்போது அந்த பெண் ஆட்டோவில் இருந்து இறங்கியதும், ஆட்டோவுக்கான கட்டணத்தை கொடுத்த போது, திடீரென ஆட்டோ டிரைவர் பெண்ணின் கையை பிடித்து அழகாக இருக்கீங்க என்று கூறி முத்தம் கொடுத்துள்ளார். இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்தார். அதன்படி போலீசார் ஆட்டோ பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, ஆட்டோ டிரைவர் சீனிவாசராவ் என தெரியவந்தது.

உடனே போலீசார் சீனிவாச ராவ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், குற்றத்திற்கு பயன்படுத்திய ஆட்டோவும் பறிமுதல் ெசய்யப்பட்டது.