திருத்தணி, ஆக.18: திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை அம்பேத்கர் நகரில் தண்டுமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடி திருவிழாவை முன்னிட்டு கிராம வீதிகள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து 14ம் தேதி பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 15ம் தேதி தண்டுமாரியம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. ஆடித்திருவிழால் இறுதி நாளான நேற்று மாலை காப்பு கட்டிய பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி பரவசத்துடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தண்டுமாரியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் ஆடி திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement



