Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

புழல், ஜூன் 18: சோழவரம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பழங்குடியின கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். சோழவரம் அருகே பழங்குடியினர் குடியிருப்பில் வசித்து வருபவர் காளி(50), கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டு பக்கத்தில் வசிக்கும் 4 வயது பழங்குடியின பெண் குழந்தையிடம், `பூனைக்குட்டி பிடித்து தருகிறேன் வா’ என்று அழைத்து சென்று, பாலியல் தொல்லை செய்துள்ளார். குழந்தை அங்கிருந்து வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் தெரிவித்ததின்பேரில், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காளி பாலியல் தொல்லை செய்தது உறுதியானது. இதையடுத்து, போலீசார் காளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின்னர், திருவள்ளூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.