Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கும்மிடிப்பூண்டியில் ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை கடத்திய அரசு பேருந்து நடத்துநர்: 2 தனிப்படை போலீஸ் வலை

கும்மிடிப்பூண்டி, அக்.17: கும்மிடிப்பூண்டியில் ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை கடத்திய அரசு பேருந்து நடத்துநரை 2 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டியில் கடந்த 10ம் தேதி 14 வயது சிறுமி மாயமானதாக கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மேளக்கழனி ஊராட்சி செண்ணாவரம் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துநரான லட்சுமணன்(35) என்பவர் சிறுமியிடம் பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலித்த நிலையில், சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து சிறுமியுடன் மாயமான அரசு பேருந்து நடத்துநர் லட்சுமணனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள சொகுசு விடுதியில் லட்சுமணன் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் நெல்லூர் சென்று அங்குள்ள சொகுசு ஓட்டல்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால், லட்சுமணன் தினம் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியதால் அவரை பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து, போலீசார் சிறுமியுடன் தப்பிய லட்சுமணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.