Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மினி லாரியில் கடத்திய 800 கிலோ குட்கா பறிமுதல்: பெங்களூருவை சேர்ந்த இருவர் கைது

கும்மிடிப்பூண்டி, அக்.17: கும்மிடிப்பூண்டியில் மினி லாரியில் கடத்திய 800 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டியில், நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அட்டை பெட்டிகளிடையே மறைத்து வைத்திருந்த 800 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது.

இதையடுத்து, போலீசார் குட்கா பொருட்களுடன் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், பெங்களூருவைச் சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ்(33), உதவியாளர் நிஜாமுதீன்(21) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.