Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வீடுகள் மற்றும் தெருக்களில் வைத்திருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று ஏரியில் கரைப்பு: பாதுகாப்பு பணியில் 300 போலீசார்

திருவள்ளூர், செப்.17: மாவட்டம் முழுவதும் வீடுகள், கோயில்கள் மற்றும் தெருக்களில் வைக்கப்பட்டிருந்து விநாயகர் சிலைகளை நேற்று ஊர்வலமாக எடுத்து சென்ற ஏரியில் பொதுமக்கள் கரைத்து வருகின்றனர். இதில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது களிமண் மற்றும் நீரில் எளிதில் கரையக்கூடிய பல்வேறு வடிவில் விநாயகர் சிலைகளை வீடுகள், கோயில்கள் மற்றும் தெருக்களில் வைத்து வழிபாடு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சிலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண்ணால் மட்டுமே செய்யப்பட வேண்டும். ரசாயன வர்ணங்கள் அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த சாயங்களைப் பயன்படுத்தக் கூடாது. இதர வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் சிலைகள் வைக்க அனுமதி இல்லை. அதன்படி வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை, மின்சாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளிடம் உரிய தடையில்லாச் சான்று பெற்ற பிறகு விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளித்தனர்.

இந்நிலையில், சிலைகளின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தலா 2 நபர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் என்றும், மத உணர்வுகளை தூண்டும் வகையில் பதாகைகள் வைக்கவோ, கோஷங்கள் எழுப்பவோ கூடாது. பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருவள்ளூரில் 166 இடங்களிலும், ஊத்துக்கோட்டையில் 239 இடங்களிலும், திருத்தணியில் 294 இடங்களிலும், கும்மிடிப்பூண்டியில் 193 இடங்களிலும் என மொத்தம் 892 இடங்களில் சிலைகளை வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

இதில் திருவள்ளூர் நகரம், கடம்பத்தூர், மப்பேடு, அரண்வாயில், மணவாள நகர், செவ்வாய்பேட்டை, புல்லரம்பாக்கம், திருப்பாச்சூர் ஆகிய பகுதிகளில் 166 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளித்ததின்பேரில், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த சிலைகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் நேற்று மாலையும், வரும் 20ம் தேதியும் கரைக்கப்பட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதில், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக திருவள்ளூர் ஆயில் மில் பகுதிக்கு டிராக்டர்கள், மினி வேன்கள் போன்ற பல்வேறு வாகனங்களில் கொண்டு வந்து மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள குறிப்பிட்ட வழித்தடங்களில் விதிமுறைப்படியும், பலத்த போலீஸ் பாதுகாப்புடனும் ஊர்வலமாக எடுத்துச்சென்று காக்களூர் ஏரியில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கரைத்து வருகின்றனர்.

இதனால், திருவள்ளூர் ஆயில் மில் ஜெ.என் சாலை, ராஜாஜி சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜ வீதி உள்ளிட ஊர்வலப்பாதையில் மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரை சாலையின் இருபக்கமும் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த, விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வி.வி.சாய்பிரனீத் உத்தரவின்பேரில், திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன் மேற்பார்வையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.