Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி, ஆக.17: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை சிறப்பு பெற்றதாகும். இந்த ஆடி கிருத்திகை மற்றும் ஆடி மாதம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்து சாமிக்கு நேர்த்தி கடன் செலுத்தி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், ஆடி மாதம் நேற்று நிறைவு பெற உள்ள நிலையில், ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து முருகன் மலைக்கோயிலில் காவடிகளுடன் குவிந்தனர்.

இதனால் மலையடிவாரம் சரவணப் பொய்கை திருக்குளம் முதல் திருப்படிகள் வழியாகவும் மலைப்பாதை வழியாக வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் மழைக்கு வந்திருந்தனர். இதனால் மலைக்கோயிலில் காவடிகளுடன் அரோகரா பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து காவடிகள் செலுத்தி வழிபட்டனர். பொது வழியில் 3 மணி நேரம், ரூ.100 சிறப்பு கட்டண வழியில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒட்டி பக்தர்கள் கூட்டம் மலைக்கோயிலில் குவிந்ததால் கோலாகலமாக காணப்பட்டது.