Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மழைக்கால முன்னெச்சரிக்கை பணி மோட்டார், இயந்திரம் சோதனை

மணலி, ஆக. 17: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம் 2ல் மழைக்காலத்தில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய மழைநீர் அகற்றும் மோட்டார்கள், மரக்கிளை வெட்டும் இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவைகளை முன்னெச்சரிக்கையாக சரிபார்க்கும் பணி மண்டல அலுவலகத்தில் நடந்தது. மண்டல உதவி ஆணையர் அரவிந்தன், செயற்பொறியாளர் தேவேந்திரன் இணைப்பு துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் சரியாக இயங்குகிறதா என சோதனை செய்தனர்.அப்போது, அனைத்து இயந்திரங்களும் தடையில்லாமல் இயங்கவும், மழை காலம் துவங்குவதற்கு முன் அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைப்பது குறித்தும் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.