Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விரைவு ரயில் மோதி பள்ளி மாணவர் பலி: திருத்தணி அருகே சோகம்

திருத்தணி, அக்.16: திருத்தணி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி பள்ளி மாணவர் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணி அடுத்த மத்தூர் காலனியைச் சேர்ந்தவர் காளிதாஸ். அவரது மகன் சூர்யபிரகாஷ் (13). அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை கிராமத்திற்கு அருகில் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்க ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் தகவலின் பேரில் அரக்கோணம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இயற்கை உபாதை கழிக்க ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி மாணவன் ரயில் மோதி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.