Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் தவெகவை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி,அக்.16: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலைய நுழைவு வாயிலில் மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும், மின் வினியோகத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மின் பாதைகள், மின் உற்பத்தியை தனியார்மய பிபிபி திட்டத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கின்ற 5 ஆண்டு ஒப்பந்த தொழிலாளர் முறையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வெளி மார்க்கெட்டில் பன்மடங்கு விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் தவெக அரசின் முடிவையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.