Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

காமராஜர் பிறந்தநாள் விழா: பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை

திருத்தணி, ஜூலை 16: முன்னாள் முதல்வர் காமராஜரின் 124வது பிறந்த நாள் விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆர்.கே.பேட்டை அருகே ராஜாநகரம் கிராமத்தில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் காமராஜர் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகள் கோவிந்தராஜ், துரைசாமி, சிவலிங்கம், ஆசிரியர் சிவஞானம், சுப்பிரமணி ஆகியோர் சார்பில் கடந்த ஆண்டு பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த அரசுப் பள்ளி மாணவர்கள், மற்றும் 5ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.2 ஆயிரம் வீதம் கல்வி உதவித் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுறை போட்டி, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் சிறந்த ஓவியங்களை தேர்வு செய்து மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். பொதட்டூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா தலைமை ஆசிரியர் தாமோதரன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.கே.ரமேஷ் பங்கேற்று மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.