Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புழல் சிறையில் ஆசனவாயில் கைதி பதுக்கி வைத்திருந்த செல்போன் பறிமுதல்: போலீசார் விசாரணை

புழல், அக்.15: புழல் சிறையில் கைதி, அவரது ஆசனவாயில் பதுக்கி வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புழல் விசாரணை சிறையில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில், சிவகங்கை மாவட்டம், கள்ளர்குளம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (22) என்பவர், சென்னையில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், சென்னை பீர்க்கங்கரணை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக கைதாகி, கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி முதல் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை, கடந்த வாரம் மற்றொரு வழக்கு சம்பந்தமாக திருப்பூர் நீதிமன்றத்திற்கு சிறை காவலர்கள் அழைத்துச்சென்று ஆஜர்படுத்தி, மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். நேற்று சிறையில் காவலர்கள் வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொண்டபோது, மகேந்திரன் நடையில் சந்தேகம் அடைந்த காவலர்கள் முழு பரிசோதனை செய்தனர்.

அப்போது, மகேந்திரன் ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தது செல்போன் கண்டெடுத்து விசாரணை நடத்தியதில், திருப்பூர் நீதிமன்றத்திற்கு சென்று வந்தபோது, ஆசனவாயில் மறைத்து செல்போன் எடுத்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், செல்போனை பறிமுதல் செய்த சிறை அதிகாரிகள், அதனை புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகார் அளித்தனர். புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறை கைதியான மகேந்திரன் திருப்பூர் நீதிமன்றத்திற்கு சென்றபோது, எப்படி ஆசனவாயில் மறைத்து செல்போன் கொண்டு வந்தார். இதற்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் யார், அவர்கள் கொடுத்த அனுப்பினார்களா அல்லது மகேந்திரன் நண்பர்கள் யாராவது நீதிமன்றம் வந்து வழங்கினார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.